உலகின் மிகப்பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தில்வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகஎச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாகவெளியேற்றப்பட்டுள்ளனர்.பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள இக்கோபுரத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக, இக்கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் உள்ளுர் நேரப்படி செவ்வாய் இரவு9மணியளவில்தொலைபேசிமூலம் எச்சரிக்கைவிடுத்தார்.அதையடுத்து அங்கிருந்தசுற்றுலாப்பயணிகளும்ஏனையோரும்பொலிஸாராவெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் சுமார்25,000பேர் ஈபிள்கோபுரப் பகுதியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.ஈபிள் கோபுரத்தைச் சுற்றியுள்ள பூங்காவிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்324மீற்றர் (1063அடி) உயரமான ஈபிள் கோபுரம் 1889 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதுஇதற்குமுன் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதியும் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். 22.07.2003 இல் தீவிபத்து ஒன்றின் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Recent Posts
Popular Posts
-
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபை...
-
உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் அன்பே அன்பே எங்குள்ளதோ அங்கே அங்கே நான் இருப்பன் ஒளியின...
-
அனைத்து கிறிஸ்தவ தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்க இங்கே இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண h...
-
40 நாள் ஜெப யாத்திரைKovai District (Day 14) - 2016
-
தோழர்களுக்கு வணக்கம், தமிழினப்படுகொலைக்கான 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை தடுத்து 17 தோழர்களை சிறைப்படுத்தியதற்கும் மற்றும் எங்கள் (டைசன், இள...
-
நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ? பாகம் 01 காண http://ac-sarujan.blogspot.com/2012/11/blog-post_20.html பல சர...
-
தாமதம் ஏனோ ? எங்கள் இயேசுவே தாமதித்தோம் இந்த நாள்வரையும் தாழ்விடங்களில் நோக்கி பார்த்து தற்பரனே இரங்கிடுவீர் சீக்கிரம் என்று சொன்னவரே சியோனி...
0 comments:
Post a Comment